ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (அக். 27) அதிரடியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்துள்ளது.
இந்த விலை குறைப்பிற்குப் பிறகு, 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து, ரூ.11,450-க்கு விற்பனையாகிறது. அதேபோல், எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் புதிய விலை ரூ.91,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை குறைந்திருக்கும் நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.170 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,70,000 என்றும் இன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாறி வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் நகை வாங்குவோரிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது
