பிலிப்பைன்ஸ் நாட்டில் அண்மையில் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், அதற்கு முன்னதாக அங்கு அரங்கேறிய சில விசித்திரமான சம்பவங்கள் உலக நாடுகளை உலுக்கியுள்ளன.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அந்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் திடீரெனக் கரை ஒதுங்கி உயிரிழந்ததோடு, வானத்தில் பார்ப்போரைக் கண் இமைக்க விடாமல் செய்யும் விசித்திரமான மேகக் கூட்டங்கள் மற்றும் ஒளிரும் விசித்திரக் கோலங்கள் தோன்றியதாக புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசித்திர நிகழ்வுகள் பூகம்பத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் புவிக்காந்த மாற்றங்களே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Bunu izlediniz mi 😳
Filipinler’deki 7,8 büyüklüğündeki depremden önce binlerce balığın kıyıya vurduğu ve gökyüzünde dikkat çeken görüntüler oluştuğu belirtildi.#filipinler #deprem #zelzele #philippines pic.twitter.com/6IDtDHjvo3
— Sibel (@GulSibos) June 8, 2026
“>
