தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயது மூப்பு காரணமாகவும், சமீபகாலமாகவே ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளாலும் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திலேயே வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இப்போது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அவரது தீவிர ரசிகர்களையும், ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
