தமிழ் திரையுலகில் கிராமத்து கதைகளின் மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்திய ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சமீபகாலமாகவே பாதிக்கப்பட்டு, இல்லத்திலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியுள்ளது.
கடந்த ஆண்டு தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, அந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், இன்று அவரது உயிரும் பிரிந்தது ரசிகர்களைப் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
’16 வயதினிலே’ தொடங்கி ‘முதல் மரியாதை’, ‘கிழக்கே போகும் ரயில்’ என தமிழ் சினிமாவின் முகவரியை மாற்றிய மாபெரும் கலைஞனின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
