அதிமுக கட்சியின் முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறுகிறார். அவர் அந்த 41 குடும்பங்களிடமும் நேரில் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காக அழைத்துள்ளார். விஜயின் மாஸ் ஓட்டாக மாற தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை. அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது. அவர் வரவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை.
விஜயின் வருகையால் வாக்கு எண்ணிக்கை குறையும் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அதிமுக தோல்வி அடையாது. விஜயை நாங்கள் அழைக்கவில்லை. ஆனால் அவர் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜயின் எதிர்காலத்திற்கு நல்லது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் சற்று வாக்கு சதவீதம் குறையும் அதே நேரத்தில் தோல்வியடைய வாய்ப்பில்லை. விஜய் வந்தால் 220 சீட்டிலும் அவர் வரவில்லை என்றால் 150 சீட்டிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
