நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைசேர்ந்த மாணவர்கள் மட்டுமே www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு ரூ.25,000 அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்