செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீதி மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது