தமிழக அரசியல் களம் முன்பை விட இப்போது பல மடங்கு சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்குப் பிறகு, வரும் மே 10-ஆம் தேதி வரை அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தவெக தலைவர் விஜய் மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட முயன்று வரும் வேளையில், திமுக தனது எம்.எல்.ஏ-க்களை ஒருகிணைந்து வைத்திருக்க இந்த ‘செக்’ வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

மே 10-க்குள் தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், திமுக-வின் இந்த மூவ் மற்ற கட்சிகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது.

கோட்டை நோக்கிய பயணத்தில் ஸ்டாலின் எடுக்கும் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.