சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை 2080 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1440 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 96 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 12,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேப்போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13091 ரூபாய்க்கும், ஒரு சவரன் 104728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 188 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 188000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.