திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் அவரது பண்ணை வீட்டிலேயே மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் போல வந்து தங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அவரை நாற்காலியில் கட்டிப்போட்டு, முகம் மற்றும் மூக்குப் பகுதியைத் டேப்பால் ஒட்டி மூச்சு முட்ட வைத்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த நகை, மோதிரங்களைத் திருடிய அந்தக் கும்பல், ஆதாரங்களை மறைக்க சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும் நடிகை விஷ்ணு பிரியா சூர்யாவின் மாயாவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
