பாமக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பாமக கட்சியின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு செயல் தலைவராக அவரது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்தனர். பின்னர் ஜிகே மணியை கவுரவ தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு பாமக கட்சியின் பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணியை ஏற்கனவே ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் தற்போது பசுமை தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து அவரது மனைவி சௌமியாவையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
