பாஜக – அமமுகவுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சி அமமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து ஆகியுள்ளது. தொகுதி உடன்பாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடி வி தினகரன் கையெழுத்திட்டுள்ளனர்.