அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை எதிர்த்து போட்டியிட உள்ளார். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரிடம் 120767 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.