மக்களவை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனையடுத்து அரசியல் கட்சியினர் பலரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் மத்திய அரசு முறையாக சோதனைகளைச் செய்திருந்தால், நாடு முழுவதும் இந்தளவுக்கு போதைப்பொருள்கள் நிச்சயம் பரவியிருக்காது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “10 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாத மோடி, இங்கு எத்தனை முறை வந்தாலும் எந்தப் பயனுமில்லை. பாஜகவின் பித்தலாட்டம் இங்கு எடுபடாது. இங்கே பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்