வேட்பாளர் அறிவிக்கும் முன்பே திருச்சி பாஜகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராம.சீனிவாசன் பாஜக வேட்பாளராக திருச்சியில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சூர்யா X தள பதிவில், திருச்சி மாவட்டத்தை சேராத ராம சீனிவாசனை களமிறக்கினால், திருச்சியில் பாஜக டெபாசீட்டை இழக்கும். மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.