சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோவை திருப்ப முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்