சேலம் மாவட்டம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சேலம் ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

Image