சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்
காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது.