விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.