சென்னை உயர்நீதிமன்றத்தில் புது நீதிபதியாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக கொலீஜியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது “பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோன்று லட்சுமி நாராயணன், சந்திரா விக்டோரியா, ராமசாமி நீலகண்டன், ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகிய 5 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில், விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதியாக இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.