ஜிஎஸ்டி வரி திருத்தம் குறித்து நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில், “ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம். ஒரே நாடு, ஒரே வரி என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவு இன்று நினைவாகியுள்ளது” என கூறினார்.
இனி ஜிஎஸ்டியில் 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்றும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்கள் 5% வரி விகிதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் பால்,பிரெட் , பிஸ்கட், தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விலை நாளை (செப்.22) முதல் குறையும் எனவும், இது மிடில் கிளாஸ் மற்றும் நியோ மிடில் கிளாஸ் மக்களுக்கு “டபுள் போனஸ் ” எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 25 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ள ஒன்றிய அரசு, இந்த வரி குறைப்பால் மேலும் நன்மை ஏற்படும் என கூறினார்.
