சமூக ஊடகங்களில் வைரலான தொலைபேசி உரையாடலில், சிஆர்பிஎஃப் வீரரை கடுமையாக திட்டியதால், அனுராதா வர்மா என்ற பெண் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடன் தகராறு தொடர்பாக சிஆர்பிஎஃப் வீரருடன் நடந்த உரையாடலில், “நீங்கள் படிக்காதவர், அதனால்தான் எல்லைக்கு அனுப்பியிருக்காங்க… அதனால்தான் உங்கள் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறக்கிறார்கள்” என கூறியதாக அந்த ஆடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வீரரை “பிச்சைக்காரன்” என்றும், “உங்க சேவை எதுக்குனு தெரியல” என்றும் அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
A woman who abused an Indian Army personnel has apologized.
But does she deserve an apology?
It doesn’t matter if she was frustrated or in a bad mood. She cannot speak like that, especially to an Army officer.
She has crossed all limits. https://t.co/lfeD7XWkoI pic.twitter.com/gbo5J6U82v
— Lakshay Mehta (@lakshaymehta31) September 20, 2025
“>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கோபத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் பலர் இந்தப் பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Clarification. pic.twitter.com/YjS1F17Zf3
— HDFC Bank (@HDFC_Bank) September 19, 2025
“>
இதில் அவர் HDFC வங்கியில் பணியாற்றுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்குப் பதிலாக, HDFC வங்கி ஒரு விளக்கத்தை வெளியிட்டு, “அந்த நபர் எங்கள் ஊழியர் அல்ல. அவர் பங்குபெற்றிருக்கும் செயல்கள் எங்கள் நிறுவனத்தின் மதிப்புகளுக்கு எதிரானவை” எனத் தெரிவித்தது.
वायरल ऑडियो सुनिए, झगड़ा क्यों हुआ, मुझे नहीं पता। लेकिन कथित @HDFC_Bank की महिलाकर्मी ने लोन को लेकर एक सैन्यकर्मी से बदसलूकी की इंतेहा कर दी। इतना ही नहीं, पूरी सेना और शहीदों का अपमान किया, गालियां दीं। लोन लेने वालों की तो जबरदस्त इज्जत उतारी। लोन लेने वालों सावधान!#HDFC pic.twitter.com/WJWIuXYSoq
— Naval Kant Sinha | नवल कान्त सिन्हा (@navalkant) September 17, 2025
“>
வெகுவாக வைரலான இந்த சம்பவத்துக்குப் பிறகு, அனுராதா வர்மா ஒரு வீடியோவில் மன்னிப்பு கோரினார். “நான் கோபத்தில், மன அழுத்தத்தில் இருந்ததால்தான் அந்த வார்த்தைகள் வந்தது. சிஆர்பிஎஃப் வீரர்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. எனது வார்த்தைகளால் யாரும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
நாட்டு வீரர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் எனக்கில்லை” என உணர்ச்சி மயமான குரலில் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், “நீங்கள் என்னை தண்டிக்க விரும்பினால் செய்யலாம், ஆனால் என்னை மோசமான வார்த்தைகளால் தாக்காதீர்கள்” என்றும் கூறி, தற்போது ஏற்பட்ட சர்ச்சையில் இருந்து வெளியே வர முயற்சித்துள்ளார்.
