நாட்டின் வரித்துறை வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படும் ஜிஎஸ்டி திருத்தம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களிடம் உரையாற்றினார்.

“ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம்” என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், “ஒரே நாடு, ஒரே வரி என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவு இன்று நினைவாகியுள்ளது. இனி ஜிஎஸ்டி விகிதங்களில் 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

வரி கட்டமைப்பில் இவ்வாறு எளிமை செய்யப்பட்டுள்ளதனால், பொதுமக்கள் சுமை குறையும்” என்றும், “25 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து ஒன்றிய அரசு மீட்டுள்ளது” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.