ஜிஎஸ்டி வரி மாற்றம் நாளை (செப்.22) முதல் அமலுக்கு வர இருப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர், “அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள். நாளை முதல் ஜிஎஸ்டி திருத்தங்கள் நடைமுறைக்கு வருகிறது. இந்த வரி குறைப்பின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். குறிப்பாக, ஏழை மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வாய்ப்பு பெறுவர்.
இதன்மூலம் அவர்களது மாதச் செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என கூறினார். அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை சமூக நலனில் அமையக்கூடியது எனவும், மக்கள் வாழ்வதரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.
