சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 110 , ஒரு சவரன் 880 ரூபாய் குறைந்து, 86,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை குறைந்து இன்று ஒரு கிராம் 161 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 161,000.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
