வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை முற்றிலும் மறுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி; இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளார். மேலும், இன்று மாலை மிக முக்கிய செய்தி வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்