பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு 90 வயது ஆகும் நிலையில் சென்னை பெரம்பலூரில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் தற்போது மரணம் அடைந்தார். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பதித்தவர்.
இவர் நான் உங்கள் வீட்டு பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், இறைவன் படைத்த உலகை போன்ற பல காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
