தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் நடிக்கும் நிலையில் அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் இன்று இயக்குனர் எச் வினோத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.