தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் விஜய்யுடன், அவரது அமைச்சரவையில் இடம் பெறப்போகும் பட்டாளம் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
இந்த உத்தேச பட்டியலின்படி, அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன், விஜய்யின் வலதுகரமான புஸ்ஸி ஆனந்த், ஐடி விங் நிபுணர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களுடன் ராஜ்மோகன், முஸ்தபா, அருண்ராஜ், வெங்கட்ராமணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. மேலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சத்யபாமா, கீர்த்தனா ஆகியோருக்கும், காரைக்குடியில் சீமானை வீழ்த்தி மாஸ் காட்டிய டாக்டர் பிரபுவுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சினிமா முதல் அரசியல் வரை நீண்ட பயணத்திற்குப் பிறகு, ஒரு ‘யங் அண்ட் டைனமிக்’ அமைச்சரவையுடன் விஜய் கோட்டையில் தனது புதிய இன்னிங்ஸை இன்று தொடங்குகிறார்.
