தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உள்ள பரபரப்பான சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விமர்சித்து அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி பேசியுள்ள கருத்துக்கள் தீயாய் பரவி வருகின்றன.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிடிவி தினகரனை அணு அணுவாகத் தெரிந்த ஒரே ஆள் நான்தான்; அவர்(காமராஜ் ) எங்கே சென்றார் என்றே தெரியவில்லை, ஒரு எம்.எல்.ஏ-வே காணாமல் போனது குறித்து அவர் எப்படிப் பேசினார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விஜய்யின் புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டைத் தான் மனதாரப் பாராட்டுவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
TTV தினகரன் MLA காணாமல் போனாருனு எப்படி சொன்னாரு..?கம்யூனிஸ்ட் கட்சியை மனதார பாராட்டுகிறேன்.. தினகரனை அணு அணுவா தெரிந்த ஒரே ஆள் புகழேந்தி தான் #Pugalenthi #TTVDhinakaran #AMMK #Vijay #TVK #TVKvijay #Newstamil24x7 pic.twitter.com/EolyhUrkEh
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 10, 2026
“>
தினகரனுக்கும் புகழேந்திக்கும் இடையே ஏற்கனவே மோதல் நிலவி வரும் நிலையில், தவெக ஆட்சியமைக்கும் இந்த முக்கிய தருணத்தில் அவர் தினகரனை கடுமையாகச் சாடிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
