தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது.
#WATCH | விஜய் பதவியேற்பு விழா.. நேரு ஸ்டேடியம் வந்தடைந்த நடிகை த்ரிஷா!#SunNews | #Trisha | #TVKVijay pic.twitter.com/JY11hQgdA4
— Sun News (@sunnewstamil) May 10, 2026
இதன் காரணமாக ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு விஜய்க்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. மேலும் இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை ஏராளமான ஒரு கலந்து கொள்ளும் நிலையில் திரிஷாவும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
