சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16,320 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் வெள்ளி விலை உயர்ந்து ஒரு கிராம் இன்று 12 ரூபாய் வரையில் உயர்ந்து 387 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
