சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டு சந்தேக வழக்கில் 5 போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. பேராசிரியர் நிகிதா நகை திருட்டு புகார் கொடுத்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் சென்று அஜித்குமாரை அடித்து கொலை செய்தனர். அவரது மரணத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்து கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஐந்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்ததோடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில் மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் இந்த குற்ற பத்திரிக்கையை மாவட்ட நீதிமன்றம் சிபிஐக்கு மீண்டும் திருப்பி அனுப்பி விட்டது. அதாவது அதில் குறைகள் இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனால் தான் சிபிஐ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை நீதிமன்றம் திருப்பி அனுப்பி உள்ளது.