தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வரும் நிலையில் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சிறப்பு தீவிரவாக்காளர் பட்டியல் பணிகள் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் தகுதி வாய்ந்தவர்களின் பெயரை நீக்க ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 20-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தற்போது சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நடைபெறக்கூடிய முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பதால் கண்டிப்பாக SIR பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.