தமிழக வெற்றிக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் அவர் தற்போது தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக அவரும் விஜயும் கூறிவரும் நிலையில் அடுத்தடுத்து பல நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றி தழகத்தில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேம்பத்தி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த திமுக, பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் அந்தக் கட்சியிலிருந்து விலகி தற்போது செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்த நிலையில் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.