தமிழக வெற்றி கழகத்தில் தற்போது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட அது உறுதியாகும் நிலையிலேயே இருக்கிறது. அதே நேரத்தில் தேமுதிகவும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில் இது தொடர்பான அறிவிப்புகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. இந்த முறை குறைந்தது 10 எம்எல்ஏக்களை பெற்று விட வேண்டும் என டிடிவி தினகரன் காய் நகர்த்துவதால் அவர் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோமோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் மற்றொரு வலுவான கூட்டணி அமையும் என்றும் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் அணியில் இருக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் முக்குலத்தோர் வாக்குகளை விஜய் வெல்ல முடியும். அதே நேரத்தில் அதிமுகவின் வாக்கு வங்கிகளையும் உடைக்க முடியும் என்று கூறப்படுகிறது. தேமுதிகவும் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்த் வாக்குகளையும் விஜயால் பெற முடியும். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாமகவை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் சேலம் உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் வெற்றி பெற பாமகவின் ஆதரவு தேவை என்பதால் பாமகவை நிச்சயம் அதிமுக விட்டுக்கொடுக்காது என்றும் அதனால் தான் தொகுதி பங்கீடு தொடர்பான செய்திகளில் கூட அவர்களுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது.
மேலும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ், தேமுதிக உள்ள கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அது மூன்றாவது மாபெரும் கூட்டணியாக இருப்பதோடு கண்டிப்பாக அடுத்த பெரும் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிமுகவின் வாக்கு வங்கி பிளவுபடுமென்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் அதே நேரத்தில் இதனால் திமுகவுக்கு பிரச்சனை இருக்காது என்றும் திமுக கிட்டத்தட்ட வெற்றி பெற வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
