தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயுடன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுமார் 20 நிமிடங்கள் செல்போனில் பேசியதாக தகவல் வெளிவந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தன்னுடைய உரிமை மீட்பு குழுவை கழகமாக மாற்றி தனி கட்சியாக மாற்ற உள்ளார். இதன் காரணமாக அவர் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் அவருடன் இருப்பவர்களும் அதற்கு விருப்பப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில் டிடிவி தினகரனும் தாங்கள் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் எனக் கூறி வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கோட்டையன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறது நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம் விரைவில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மேலும் அதிமுகவிலிருந்து பல தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள் என்றும் செங்கோட்டையன் மற்றும் விஜய் கூறிவரும் நிலையில் ஒருவேளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணியை உறுதிப்படுத்தினால் கண்டிப்பாக அது அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்து வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி சாத்தியமானால் அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க முடியும் என்றும் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக தமிழ்நாட்டில் உருவாகும் என்றும் இதுவே விஜயின் மிகப்பெரிய பிளானாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
