பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவின் வாக்கு சதவீதத்தை தமிழகத்தில் அதிகரித்தார். இருப்பினும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் அவருக்கும் இடையே பல அதிருப்திகள் நிலவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தேசிய தலைமை இன்று அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது காணொளி வாயிலாக நடந்ததை விவரித்து வரும் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இனிவரும் தேர்தல்களில் நம்முடைய இயக்கம் போட்டியிடும் என்று அறிவித்த அவர் அதற்காக இணையும் நிர்வாகிகளுக்கு பிரத்தியேக பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த 18 மாதங்களாகவே பாஜக மேல் இடத்தில் இருக்கும் தனக்கும் அதிருப்தி இருந்ததாகவும் கடந்த டிசம்பர் மாதமே ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
