தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று 5-வது நாளாக மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7730 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 61,840 ரூபாயாகவும் இருக்கிறது. இந்நிலையில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 101 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 1000 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் தங்கம் விலை 5 நாட்களில் 2320 வரையில் உயர்ந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
