சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. நேற்று 1520 வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,15,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,709 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,25,672 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் இன்று கிராமுக்கு இருபது ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
