திமுக பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு மறைந்தார். அவரது மறைவு திமுக வட்டாரத்திலும், அரசியல் துறையிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 19) அவரது இல்லத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். “கழகப் பொருளாளரும் – என் ஆருயிர் நண்பருமான டி.ஆர். பாலுவின் மனைவி மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. என் நண்பரும், அவரது மகன் டி.ஆர்.பி. ராஜாவும் பொதுவாழ்வில் பயணிக்க அவருக்கு துணையாக இருந்தவர் ரேணுகாதேவி. அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. என் நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.