சென்னையில் டிடிவி தினகரனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக  தகவல் வெளியானது. இதனால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்தியும் அரசியல் வட்டாரங்களில் பரவியது. இந்நிலையில், இந்த செய்திக்கு செங்கோட்டையன் நேரடியாக பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “நான் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. என் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க மட்டுமே சென்னை வந்துள்ளேன். மற்றபடி யாரையும் நான் சந்திக்கவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

அதிமுக கட்சி ஒருங்கிணைந்து வலுவாக இருக்க வேண்டும் என்பது தான் எப்போதும் என் குறிக்கோள். பிரிவை ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” என தெளிவுபடுத்தினார். அவரது இந்த விளக்கம், அதிமுக உள்நிலை தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.