சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க திட்டமிட்டிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த விவகாரத்தில் ஏற்கனவே அவரது அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்தால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை உணர்ந்த செங்கோட்டையன், தன்னை முற்றிலும் கட்சியிலிருந்து நீக்கும் சூழலை தவிர்க்கவே இன்று டிடிவி தினகரனைச் சந்திக்காமல் விலகியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் இந்த முடிவு, அதிமுக உள்நிலையில் நிலவும் பதட்டத்தை மேலும் வெளிப்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் அவர் எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.