தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டி வருகிறது. மாடுபிடி வீரர்கள் மிகவும் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளை அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் கண்டுக்களிக்கின்றனர்.

அந்த வகையில் இன்று அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு களிக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது தற்போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தற்போது மாடுபிடி வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.