தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வரும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளையும் பரபரப்பாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் வாக்குறுதிகளை முதல் கட்டமாக அறிவித்துள்ளார். அதன்படி அதிமுக ஆட்சிக்கு வந்தது மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதாவது மகளிர் நலன் குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் அனைவருக்கும் இலவச வீடு வழங்கப்படும் எனவும் பேருந்துகளில் பெண்களைப் போல ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இன்று எம்ஜிஆர் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
