தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் தன்னுடைய x பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அந்த பதிவில்,தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.