அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், “செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேச உள்ளேன்” என வெளியிட்ட கருத்து, அதிமுகவுக்குள் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.

இவர் திமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவரது நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், DMK அமைச்சர்  முத்துசாமி, “மற்ற கட்சிகளில் இருந்து யாராவது வர விரும்பினால், அவர்களை வரவேற்க திமுக எப்போதும் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் திமுக நகரவில்லை. மக்கள் நலனுக்காகவே நாம் செயல்படுகிறோம்” என்றும் அவர் வலியுறுத்தினார். செங்கோட்டையன் முடிவை எதிர்நோக்கிய அரசியல் பரிமாணம் நாளை (செப்.5) துலியமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.