2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக அமைப்பை பலப்படுத்தும் வகையில், டெல்லியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, உள்நில குழப்பங்கள் குறித்து கடுமையாக விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உட்கட்சி பூசல் தொடர்ந்து இருந்தால், அதுவே தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். மேலும், இது போன்ற நிலைப்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கு தீங்காக அமையும் என்பதையும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாமலை பதவியிலிருந்து விலகிய பிறகு, பாஜகவில் ஏற்பட்ட குழப்பம் குறித்தும், அடுத்த தலைமுறை அமைப்பு குறித்து குழப்பங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், மூத்த தலைவர்கள் கூட்டத்தை சந்தித்த அமித்ஷா, குழப்பங்களை சீர்செய்யும் பணியை உடனடியாக தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு முன், மாநில அளவில் உள்ள அமைப்புகளை தெளிவாக அமைத்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.