வரும் செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் யானாம் பகுதிகளில் இயங்கும் அனைத்து வகை மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் அனைத்தும் ஒரு நாளுக்கு மூடப்பட வேண்டுமென கலால் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதை மீறுபவர்கள் மீது, புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக இந்த அறிவுறுத்தலுக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
