தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுகவினர் இடையே கடுமையான மோதலும், கூச்சல் குழப்பமும் அரங்கேறியது. பேரவையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவைச் சேர்ந்தவர்கள் இரண்டு வயதுக் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள் என்று மிகக் கடுமையான மற்றும் அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடனடியாகத் தலையிட்டு, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். ஆதாரங்கள் இல்லாத எந்தவொரு கருத்தையும் சட்டமன்றப் பேரவையில் பேசக்கூடாது என்று அவர் எச்சரித்தார். அதற்குத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா வாதிட்ட போது, “அப்படியென்றால் அந்த ஊரைச் சொல்லுங்க, பேரைச் சொல்லுங்க” என்று சபாநாயகர் அதிரடியாக அறிவுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, அதற்கான முழு ஆதாரங்களையும் நாளைக்குச் சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடிப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையிலிருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பிளகார்டுகளை ஏந்தியும், கடுமையான கோஷங்களை எழுப்பியும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ததால் சட்டமன்றமே தற்பொழுது பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.
